«

»

யாழில் 13 உறுப்பினர்களுக்கு 462 வேட்பாளர்கள் போட்டி.

metal13
வடக்கு மாகாணத்தில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக,462 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கு 210 வேட்பாளர்களும்,வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கு 252 வேட்பாளர்களுமாக மொத்தம் 462 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஆகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதனடிப்படையில்,யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 15 அரசியல் கட்சிகளும்,6சுயேச்சைக் குழுக்களுமாக 21 குழுக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன.

மன்னார், முல்லைத்தீவு,வவுனியா, ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 18 அரசியல் கட்சிகளும் 10 சுயேச்சைக் குழுக்களுமாக 28 குழுக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6039

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.