«

»

தந்தையை இழந்த மாணவிக்கு சூரிய உதயம் அமைப்பினால் மாதாந்த புலமைபரிசில் வழங்கப்பட்டது!

கதிரவெளி பால்சேனை அ.த.க. பாடசாலையில் கல்வி பயிலும் தந்தையை இழந்த தங்கராசா.சுவிதா என்பவருக்கு சூரிய உதயம் அமைப்பினால் மாதாந்த புலமைபரிசில் திட்டத்தின் ஊடாக கல்விக்கான ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டது.

2012.08.29 அன்றைய தினம் வாகரை இலங்கை வங்கி கிளையின் ஊடாக இம்மாணவிக்கான புலமைபரிசிலை இலங்கை வங்கி முகாமையாளர் வழங்கிவைத்தார்.
இம்மாணவி தந்தையை இழந்துள்ள போதும் இவரது தாயார் கூலி வேலை செய்தே இந்த மாணவியை உயர்தரம் கற்பித்துவருகின்றார்.

இவரின் உயர்கல்வியை கல்வியை ஊக்குவிக்கும் நோக்குடன் லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு இவருக்கான மாதாந்த புலமைபரிசிலை சூரிய உதயம் அமைப்பின் ஊடாக வழங்க முன்வந்துள்ளது.

இது போன்று புலம் பெயர்ந்து வாழும் ஏனைய உறவுகளும் வறுமை காரணமாக கல்வியை தொடரமுடியாமல் உள்ள மாணவர்களுக்கு உதவ முன்வருமாறு சூரிய உதயம் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அன்பான புலம்பெயர் எம் உறவுகளே எங்கள் தேசத்து மக்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுமாறு நாங்களும் உங்களை சிரம் தாழ்த்தி வேண்டுகின்றோம்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=620

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.