«

»

ஏ.பி.ஜே அப்துல்கலாம் நேற்று இரவு காலமானார்.

24-abdul-kalam65-300
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் நேற்று இரவு காலமானார்.

மேகாலயா மாநிலம், ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஷில்லாங் நகரில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து இந்திய ராணுவ மருத்துவர்கள் விரைந்து சென்று தீவிர சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 8.30 மணியளவில் காலமானார்.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாம் என்றவாறான போற்றுதலுக்குரிய பட்டப் பெயர்களில் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kalam

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6208

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.