«

»

வாகரை பால்சேனை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பணியாற்றும் கலைவாணி அறிவகம்!

மட்டக்களப்பு வாகரை பால்சேனையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விவளர்ச்சிக்காக கலைவாணி அறிவகம் ஊடாக லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு நிதியுதவிகளை வழங்கிவருகின்றது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமை காரணமாக கல்வியில் பின்தங்கிய நிலையில் காணப்படும் வாகரை பால்சேனை கிராம மாணவர்களுக்கு பாடசாலை கல்வியைத்தவிர வேறு கல்விச் சூழல் இல்லாத நிலையை போக்கி இங்குள்ள மாணவர்களை உயர்தரத்தில் சித்தியடைய வைக்கும் நோக்குடன் கலைவாணி அறிவகத்தின் ஊடாக 6ம், 7ம், 8ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான விசேட செயற்திட்டத்தினை லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

மேற்படி அறிவகத்தின் கல்விச்சாலை மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளபோதும் மாணவர்கள் மிகவும் உற்சாகத்தில் தொடர்ந்தும் இங்கு கல்வி கற்றுவருகின்றனர்.

எனவே மேற்படி கலைவாணி அறிவகத்தின் கல்விச்சாலையை அபிவிருத்தி செய்து மேலும் இங்குள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுமாறு கல்வி நிர்வாகம் பணிவான வேண்டுகோளையும் முன்வைத்துள்ளது.

 

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=648

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.