«

»

தேசத்தின் பாலம்

வணக்கம் தாயக உறவுகளே!

எமது தேசத்தின் பாலம் அமைப்பானது கடந்த 2009ம் ஆண்டு வடகிழக்கு தாயக மண்ணில் நடைபெற்று முடிந்த கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு

 

 

அவலங்களைச் சுமந்துகொண்டிருக்கும் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும், தாயக மக்கள் மீது அக்கறையுள்ள, தாய் மண்ணை நேசிக்கின்ற நண்பர்களினால் ஆரம்பிக்கப்பட்டதாகும்.

வடகிழக்கு தாயக மக்களுக்கும் புலம்பெயர் தொண்டுப்

 

பணியாளர்களுக்கும், சமூகசேவையாளர்களுக்கும் இடையிலான உறவுப் பாலமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் எமது தேசத்தின் பாலம் அமைப்பானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடனும், தாயகத்தில் 

பணியாற்றிவரும் தொண்டு நிறுவனங்களுடனும் நேரடித்தொடர்புகளை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான உதவிகளை நேரடியாக செய்து வருகின்றோம்.

எம் தாயக மக்களின் இழப்புக்களையும், துன்பங்களையும் விளம்பரப்படுத்தி வியாபாரம் நடத்தும் அமைப்புக்களுக்கு மத்தியில் எந்தவித விளம்பரங்களையோ, நிதி சேகரிப்புக்களையோ செய்யாது குறிப்பிட்ட நன்கொடையாளர்களின் உதவிகளை பெற்று அதனை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கிவருவதோடு அதனை தேசத்தின் பாலம் அமைப்புடன் தாயகத்தில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் தொண்டு நிறுவனங்களின் ஊடாக கண்காணித்தும் வருகின்றோம்.

வடகிழக்கு தாயகத்தில் இருந்து புலம்பெயர் தேசம் நோக்கிவந்த மக்களின் மனசாட்சியாகவும், இன்றைய கட்டாய கடமையாகவும் கருதப்படும் தாயக மக்களின் மனிதநேயப் பணிகளை முன்னெடுத்து அந்த மக்களது துயர்துடைக்கும் பணிக்கான பாலமாக எங்களை அர்ப்பணித்துச் செயற்பட்டுவருகின்றோம். 

எமது தேசத்திற்கான பாலத்தின் தூண்களாக எங்களுடன் இணைந்து பணியாற்ற  முன்வருமாறு புலம்பெயர் தேசத்தின் நன்கொடையாளர்களுக்கு அழைப்பு விடுப்பதோடு எமது தாய் மண்னை கட்டியெழுப்ப விரைந்து செயற்படுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம். 

எமது தேசத்தின் பாலம் அமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்படும் உதவித்திட்டங்கள்.

1.    பெண்கள் தலைமைதாங்கும்(விதவைகள்) குடும்பங்களுக்கான நிதியுதவிகள் -சுயதொழில்   வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்தல்
2.    உடல் ஊனமுற்றவர்களுக்கான நிதியுதவிகள், மருத்துவ உதவிகள்.
3.    வறிய மாணவர்களுக்கான இலவச கல்வி ,உபகரண உதவிகள்.
4.    மாலைநேர இலவச கல்வி நிலையங்களை அமைத்து செயற்படுத்தல்.
5.    இலவச கணனிப் பயிற்சி நிலையங்களை அமைத்தல்.
6.    தையல் பயிற்சி நிலையங்களை அமைத்தல்.

தாயகத்தில் எமது தேசத்தின் பாலம் அமைப்பு இணைந்து பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள்.

1.    சிறுவர் அபிவிருத்தி நிலையம்
2.    சேவகம் தொண்டு நிறுவனம்
3.    சூரியோதயம் சமூகசேவை அமைப்பு

நன்றி
தேசத்தின் பாலம்
நிர்வாகம்
தொடர்புக்கு:- 
தேசத்தின் பாலம்
தொலைபேசி இல- திரு.பாஸ்கரன்-00947877949882
திரு.பாலா-00947540486263

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=674

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.