«

»

யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு

Jaffna-court
இனந்தெரியாத ரௌவுடிக் கும்பலொன்று பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள சட்டத்தரணி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டிலிருந்தவர்களை தாக்கியமைக் கண்டித்து, யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி, பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் இரண்டு தரப்பினர் கைகலப்பில் ஈடுபட்டிருந்ததுடன் அவர்களில் ஒரு தரப்பினர், சட்டத்தரணியின் வீட்டுக்குள் நுழைந்து வீட்டிலுள்ளவர்களை துன்புறுத்தி, வீட்டிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியிருந்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, யாழ். மாவட்ட சட்டத்தரணிகள், நீதிமன்றங்களுக்கு செல்லாது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதுடன் நீதிமன்ற வளாகமும் வெறிச் சோடிக் காணப்படுகின்றது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6834

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.