«

»

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக நடத்தப்படும் சூரிய உதயம் படிப்பகம்!

மட்டக்களப்பு வாகரையில் சிறுவர்களுக்கான படிப்பகத்தை சூரிய உதயம் அமைப்பு நடத்தி வருகின்றது. இப்படிப்பகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 60 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இப்படிப்பகத்திற்கான நிதியுதவியினை லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு வழங்கி வருகின்றது. இப்படிப்பகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தாய், தந்தையரை இழந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

பால்ச்சேனை கிராமத்தில் வேறு கல்வி நிலையங்களோ கல்விச்சூழலோ இல்லாத காரணத்தினால் சூரிய உதயம் படிப்பகம் இங்குள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்து வருகின்றது.

 

 

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=693

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.