«

»

குமார் குணரட்னம் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் – குடிவரவு கட்டுப்பாட்டாளர்

Kumar Kunaratnam_CI
முன்னிலை சோசலிஸக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் குமார் குணரட்னம், குடிவரவு சட்டத்தின்படி நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று குடிவரவு கட்டுபாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வீசா காலம் முடிவடைந்த நிலையில் இலங்கையில் தங்கியிருந்தமைக்காக குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குடிவரவு கட்டுபாட்டாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.
வீசா முடிவடைந்து நாட்டில் தங்கியுள்ள அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவர் இலங்கைக்கு வரவேண்டுமானால் தமது ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குமார் குணரட்னம், கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் 30 நாட்களுக்கு சுற்றுலா விசாவிலேயே இலங்கை வந்திருந்தார்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள அவர் எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7049

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.