«

»

மட்டக்களப்பில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

batty_body_002
மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-திருமலை பிரதான வீதியிலுள்ள தனியார் காணி ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட மலசலகூட அறையொன்றில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று இன்று மதியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி சடலத்தை பார்வையிட அதிகளவான பொது மக்கள் குறித்த இடத்திற்கு வருகை தந்த வண்ணமுள்ளனர்.

குறித்த சடலம் தொடர்பான விசாரணைகளை ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நபர் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் இது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7576

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.