«

»

ஊழல் இல்லாமல் கிழக்கில் அபிவிருத்தி – கிழக்கு முதலமைச்சர்

habis
ஊழல் மோசடி என்ற விடயங்கள் இல்லாமல் அரசினால் ஒதுக்கப்படுகின்ற நிதிகளை வைத்து கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்து வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை நாசீவந்தீவில் பொது நூலக கட்டடம் மற்றும் குடிநீர் தாங்கிக்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, சிப்லி பாறூக், உதவி உள்ளுராட்சி ஆணையாளர் எஸ்.சித்திரவேல் மற்றும் பிரதேச பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த நிகழ்வில் மேலும் உரையாற்றுகையில் , கிழக்கு மாகாணத்திற்கு கிடைக்கின்ற நிதிகளை நல்ல முறையில் செலவழிக்கின்ற நல்லாட்சியை தாம் உருவாக்கி இருப்பதாகவும் , தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8253

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.