«

»

உலகமே எதிர்ப்பார்க்கும் அமெரிக்க தேர்தல்: ஆட்சியை பிடிப்பது யார்?

USA F
சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் வாக்குப்பதிவு நாளை தொடங்கவுள்ள நிலையில் முன்னணியில் உள்ள வேட்பாளர்கள் குறித்து கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.
உலக நாடுகள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்பும் போட்டியிட்டு வருகின்றனர்.
தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் ஓய்வு பெற்றுள்ள நிலையில், தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார் என்ற கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் வெளியாகும் நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள இக்கருத்து கணிப்பில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
அதாவது, ஹிலாரி கிளிண்டன் 45.3 புள்ளிகளும் டொனால்ட் டிரம்ப் 43 புள்ளிகளும் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவு நேரத்தில் இக்கருத்து கணிப்பில் எதிர்பாராத மாற்றம் நிகழ்ந்தாலும் கூட, ஜனாதிபதி பதவியில் ஹிலாரி கிளிண்டன் அமர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றால் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெயரையும் ஹிலாரி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8280

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.