«

»

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு

டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த தேர்தல் முடிவு உலகளாவிய நாடுகளிலுள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஜனாதிபதியாகத் தேவையான 270 க்கும் அதிகமான தொகுதிகளில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன், இதுவரை 218 தொகுதிகளையே கைப்பற்றியுள்ளார். ஐந்து மாநிலங்களின் முடிவுகள் வெளியிடப்படவுள்ள நிலையில் இந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளார்.

இதேவேளை முன்னதாக ஹிலரி கிளிண்டன் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போதிலும் பின்னர் டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எனினும் தமது தோல்வி குறித்து ஹிலரி கிளிண்டன் இதுவரை கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை என அமெரிக்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

புளோரிடா, ஒஹைய்யோ, நோர்த் கரோலினா மற்றும் பென்சில்வேனியா உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றுள்ளார்.அத்துடன் பிரதிநிதிகள் சபையின் அதிகாரத்தை குடியரசு கட்சியின் மீண்டும் தம்வசப்படுத்தியுள்ளனர்.

அனைத்து அமெரிக்கர்களுக்குமான ஜனாதிபதியாக தாம் செயற்படுவதாக டொனால்ட் ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார். நாட்டை ஐக்கியப்படுத்தும் வகையில் தமக்கு ஆதரவு வழங்காத மக்களை கூட தாம் சென்றடைந்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரே ஐக்கியமான மக்கள் என்ற வகையில் ஜனநாயக கட்சியினரும் ஜனநாயக கட்சியினரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8300

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.