«

»

இறுதி வரை அமைதி காத்த,முஸ்லிம் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கிழக்கு முதல்வர்

habis
கடும்போக்குவாதிகளின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு ஆட்கொள்ளாமல், எமது வேண்டுகோளுக்கு மதிப்பளித்து இறுதி வரை அமைதி காத்த மட்டக்களப்பு மாவட்ட வாழ் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு மன மார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பகுதியில் நேற்று (03) ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

மக்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்கவேண்டிய மதகுருமார்கள் ஒழுக்கமற்ற முறையில் செயற்பட்ட போதும் ஒழுக்கமாகவும் சிறுபான்மை மக்கள் எப்போதும் இந்த நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளித்து நடந்து கொள்பவர்கள் என்பதையும் தமிழ் முஸ்லிம் மக்கள் நாட்டிற்கு எடுத்துக் காட்டியுள்ளனர்.

சிறுபான்மை மக்களின் அமைதியையும் சட்டத்தை மதிக்கும் மனப்பாங்கையும் அவர்களின் கோழைத்தனமாக கடும் போக்குவாதிகள் எடைபோட்டுவிடக்கூடாது.

அத்துடன் பொதுபலசேனா அமைப்பினர் மற்றும் கடும்போக்குவாதிகள் தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களை சீண்டிப்பார்க்கும் விதமான கருத்துக்களை கூறுவதும் நடந்து கொள்வதும் எந்த வித்த்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் இவர்கள் மீது ஜனாதிபதியும் பிரதமரும் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகின்றேன் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதற்றமான சூழ்நிலையில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க இறுதி வரை களத்தில் நின்று தமது கடமையை சரிவர நிறைவேற்றிய பாதுகாப்புத் தரப்பினருக்கு தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் முதலமைச்சர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8452

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.