«

»

சசிகலா சிறையிலிருந்து சீக்கிரம் வெளியில் வருவார் : சொல்கிறார் தீபக்

AIADMK meeting
சசிகலா சிறையிலிருந்து சீக்கிரம் வெளியில் வருவார் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா தற்போது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் நேற்று நேரில் சென்று பார்த்தார். பின்னர் வெளியில் வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், சசிகலா அத்தை சிறையில் இருப்பதற்கு பின்னணியில் பெரிய சதி உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பால் இதை பற்றி மேலும் ஏதும் கூறவிரும்பவில்லை. சசிகலா நலமாக இருப்பதாகவும், விரைவில் அவர் வெளியில் வருவார் எனவும் தீபக் கூறியுள்ளார்.
மேலும், தீபா பற்றி தன்னிடம் ஏதும் கேட்க வேண்டாம் என கூறிய தீபக், தன் ஆதரவு சசிகலாவுக்கு தொடரும் எனவும் கூறியுள்ளார்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8923

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.