«

»

அமைச்சரவைக் கூட்டத்தை பகிஷ்கரிக்கும் ஜனாதிபதி

maitripala-sirisena
அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த பிரதமர் தொடர்ந்தும் இணங்க மறுத்தால், எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் தான் பங்கேற்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமருக்கு நெருக்கமான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரிடம் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள எந்த அமைச்சையும் திரும்ப பெற போவதில்லை எனவும் ஜனாதிபதி அந்த அமைச்சரிடம் கூறியுள்ளார்.
பிரதமரின் இணக்கத்துடன் போயா தினத்திற்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய போவதாக கூறிய ஜனாதிபதி, தற்போது பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீரவின் வீட்டில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
இந்த பிரச்சினை குறித்து தனது உறவினரான அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிடம் நாடாளுமன்றத்தில் பேசியதாக அமைச்சர் அமரவீர இதன் போது கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி காரணமாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் அமைச்சரவை மாற்றம் இதுவரை நடைபெறவில்லை என பேசப்படுகிறது.
தான் வகிக்கும் பதவியில் இருந்து தன்னை நீக்கினால், நாடாளுமன்றத்தில் பின்வரிசையில் அமர்த்து திறைசேரி பிணை முறி விவகாரம் சம்பந்தமான சகல தகவல்களையும் வெளியிட போவதாக முக்கிய அமைச்சர் ஒருவர் பிரதமரை அச்சுறுத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9385

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.