«

»

பிளாஸ்டிக் அரிசி மற்றும் முட்டைகள்! உடன் அறிவிக்குமாறு கோரிக்கை

rice pl
மக்களின் பாவனைக்கு எந்த வகையிலாவது பிளாஸ்டிக் அரிசி மற்றும் முட்டைகள் கிடைக்கப்பெற்றால் உடன் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,
இது குறித்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ள சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிளாஸ்டிக் அரிசி மற்றும் முட்டைகள் நாட்டின் வர்த்தக நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் இது குறித்து சுகாதார அமைச்சுக்கு எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை. உலகில் பிளாஸ்டிக் அரிசி உற்பத்தி செய்யும் ஒரே நாடாக சீனா இருக்கின்றது.
இந்நிலையில், இறக்குமதி செய்யப்படும் அரிசி அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே விடுவிக்கப்படுகின்றது என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணமாக வழங்க கொண்டு வரப்பட்ட அரிசியிலும் இவ்வாறு பிளாஸ்டிக் அரிசிகள் இருந்ததாக முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் தெரிவிக்கப்படுவது போன்று பொது மக்களின் பாவனைக்கு பிளாஸ்டிக் அரிசி அல்லது முட்டை கிடைக்கப்பெற்றால் சுகாதார அமைச்சுக்கு உடன் முறைப்பாடு செய்யுமாறு அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
egg

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9737

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.