«

»

நெருக்கடியில் கட்டார்

qatar
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராட்சியம், பஹ்ரைன் ஆகிய மூன்று நாடுகளும் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்து ஏற்படுத்தியுள்ள சில தடைகளினால் பாரிய அடிப்படை மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுவருவதாக கட்டார் தேசிய மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
கட்டார் கொழும்பு தூதரகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கட்டார் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அலி பின் ஸிமைஹ் அல் மர்ரி,
இராஜதந்திர உறவுகள் துண்டிப்பு மற்றும் ஏற்படுத்தப்பட்டுள்ள சில தடைகள் காரணமாக பல்வேறு சர்வதேச மனித உரிமை உடன்பாடுகள் பாரதூரமாக மீறப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகம், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஆகியவை இந்த விடயத்தில் தலையிட்டு குறித்த நாடுகளில் மீறப்படுகின்ற மனித உரிமை மீறல்களை நிறுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி, சுகாதாரம், தொழில், வர்த்தகம், சுதந்திரமான நகர்வு, குடும்ப உறவுகள், அசையும் அசையா சொத்துக்கள் சார்ந்த பல முறைப்பாடுகள் தற்பொழுது கிடைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவற்றைப்பெற்று உரிய தரப்புக்களின் கவனத்திற்கு கொண்டுவந்து நடவடிக்கைளை மேற்கொள்வதற்காக 24 மணிநேரமும் இயங்கும் முறைப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் குடும்ப திருமண உறவுகளை கொண்டுள்ளோர் மீது பல்வேறு நெருக்குவாரங்கள் இடம்பெறுவதாகவும், தொழில் வர்த்தகம் சட்டபூர்வமாக அசையும் அசையா சொத்துக்கள், கம்பனிகள், கல்வி என பல்வேறு துறைகளிலும் ஈடுபாடு கொண்டுள்ளோர் அந்த நாடுகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு வேண்டப்பட்டுள்ளதால் பாரிய உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருமண உறவுகளின் படி வளைகுடா நாடுகளில் தாய் ஒரு நாட்டவராகவும் தந்தை ஒரு நாட்டவராகவும் அல்லது பிள்ளைகள் ஒரு நட்டவராகவும் இருப்பதனால் அவர்கள் மீது பயணத்தடை அல்லது நாட்டை விட்டு வெளியேற்றல் போன்ற கெடுபிடிகளும் இடம்பெறுவதாக முறையீடுகள் கிடைத்துள்ளமை குறித்தும் கட்டார் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9739

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.