«

»

முன்னாள் போராளிகளுக்கு வடமாகாண சபை உறுப்பினர்கள் நிதி வழங்க வேண்டும்

northern provincil councial 66547
வடமாகாணசபை உறுப்பினர்கள் தமக்கு வாகன வரி விலக்கு மூலம் கிடைக்கும் பணத்தில் முன்னாள் போராளிகளுக்கான காப்பகம் ஒன்று உருவாக்குவதற்காக பயன்படுத்தவேண்டும் என அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா கூறியுள்ளார்.
இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து கூறுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இச் சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய போராளிகள் இன்று அநாதரவாக சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களாக காணப்படுகின்றார்கள்.
அவர்களது நல் வாழ்க்கைக்கு யாரும் உதவி செய்யவில்லை. நாம் உதவி செய்வதாக கூறியவர்கள் ஒரு சிலருக்கு சில உதவிகளை செய்துவிட்டு அதனை புகைப்படம் எடுத்து பத்திரிகைகளுக்கு கொடுத்துவிட்டு அத்தோடு நிறுத்தி விட்டார்கள்.
குறிப்பாக போராளிகளின் வேதனைகளை அறிந்த அனந்தி சசிதரனும் போராளியாக இருந்த சிவாஜிலிங்கமும் கூட அப் போராளிகளுக்கு எதுவும் செய்யவில்லை.
இவர்களை விட அனைத்து வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுமே போராளிகளது வாழ்க்கைக்கு எதுவும் செய்யவில்லை.
ஆனால் அவர்கள் மாத்திரம் பொலிஸ் பாதுகாப்புடன் சென்று வருகின்றார்கள். இவ்வாறான நிலையிலேயே நான் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் அனைவரிடமும் ஓர் கோரிக்கையை வைக்கின்றேன்.
அதாவது மாகாண சபைகளின் உறுப்பினர்கள் அனைவரும் தமக்கு கிடைக்கின்ற வாகன கொள்வனவிற்கான பணத்தை போராளிகள் காப்பகத்திற்கு வழங்க வேண்டும் என நான் கோரிக்கை விடுகின்றேன்.
அவ்வாறு நீங்கள் அப் பணத்தை வழங்கினால் நீங்கள் வழங்கிய பணத்தின் பெறுமதியை நான் ஒரு வருடத்தில் இலங்கையின் அனைத்து தமிழர்களிடமும் வீடு வீடாக சென்று சேர்த்து அப் பணத்தை திருப்பி தருவேன்.
ஏனெனில் போராளிகள் மிகவும் துன்பப்பட்டுள்ளார்கள். அவர்களது நல்வாழ்க்கைகாக நீங்கள் இதனை செய்ய வேண்டும்.
மேலும் வடக்கு மாகாண சபையானது உருவாக்கப்பட் போது அதற்கு முதலமைச்சராக விக்னேஸ்வரனை மக்கள் வரலாறு காணாத வெற்றியுடன் முதலமைச்சராக்கினார்கள்.
காரணம் மக்கள் அவர்களது தலைவன் தமிழ் தேசிய கூட்டமைப்பை அடையாளம் காட்டியதாலும் அவ் தமிழ் தேசிய கூட்டமைப்பால் விக்னேஸ்வரன் முதலமைச்சராக அடையாளப்படுத்தப்பட்டதாலுமே.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்களது பிரச்சனைகள் தொடர்பில் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய, பேச வேண்டியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையும், முதலமைச்சருமேயாகும்.
இவர்கள் தவிர வேறு யாரும் வீணாக அலட்டிக்கொள்ள தேவையில்லை. இவ்வாறான நிலையில் முதலமைச்சருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கும் உரித்தான கௌரவத்தை பாதுகாப்பதாக இருந்தால் வடக்கு அமைச்சர் மீதான குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுடனேயே அவர்கள் பதவி விலகியிருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அமைச்சர்கள் பதவி விலகாது எப்படி விசாரனை குழு சுயமாக சுதந்திரமாக விசாரனை செய்திருக்க முடியும்.
சரி தற்போது அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு விசாரனை அறிக்கை கிடைக்கப்பட்டுள்ளது. இனியாவது அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்.
அத்துடன் எனைய அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த உறுப்பினர்கள் விசாரணை குழுவில் சாட்சியமளிக்க செல்லாத நிலையில் அவர்கள் மீதான செயற்பாடு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
அதாவது இவர்கள் தாம் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிக்காமையானது இவர்கள் யாரிடமாவது கையூட்டு பெற்றுக்கொண்டு சாட்சியமளிக்காது விட்டார்களா இல்லை பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எது எவ்வாறிருப்பினும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி விட்டு சாட்சியமளிக்க செல்லாத வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும் என தம்பிராசா கூறியுள்ளார்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9741

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.