பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் கோரிக்கை.!

ரயில்வே சேவையாளர்களின் வேலை நிறுத்தத்தால் ரயில் சேவைகள் முடங்கிப் போயுள்ள நிலையில், ரயில்களில் பயணிக்கும் மாணவர்கள் மாற்று போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும்படி கல்வி அமைச்சர் கோரியுள்ளார். இதேவேளை, பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை நேரத்துடன் அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரயில்வே தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதாக ரயில் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று முற்பகல் இடம்பெற்ற ரயில்வே தொழிற்சங்கங்களின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10938

மஹிந்தவுக்கு அஞ்சவில்லை.! – பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அணி குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அச்சப்படலாம். ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு இந்த இரண்டு கட்சிகள் தொடர்பிலும் எவ்விதமான அச்சமும் கிடையாது. ஆகவே மக்களிடம் சென்று தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உண்மையான பங்களிப்பை கூறுங்கள். மக்களின் ஆதரவு கிடைக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். உத்தேச உள்ளூராட்சிமன்ற தேர்தலில் கட்சியை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்பது குறித்து சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10936

“இணக்கபாடு இல்லையேல் தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்து போட்டியிடும்” அமைச்சர் மனோ

mano

தமிழ் முற்போக்கு கூட்டணி நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, மாத்தளை, கேகாலை, பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணிக்கு ஒரு இணக்கப்பாடு இல்லையென்றால் தனித்து போட்டியிட தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராகவுள்ளது. எமக்கு சின்னம் முக்கியம் இல்லை. எண்ணம் தான் முக்கியம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10933

வேலைக்குத் திரும்பாதவர்கள் பணியில் இருந்து விலகியவர்களாகக் கருதப்படுவர்

ஊழியர்கள் நாளைக்கு பணிக்குத் திரும்பாதவிடத்து அவர்களது வெற்றிடங்கள் புதியவர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்று போக்குவரத்துத் துறை பிரதியமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவையாக புகையிரத சேவை அறிவிக்கப்பட்டதையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு போக்குவரத்துத் துறை தொடர்ச்சியாக அறிவிப்புகளை விடுத்து வருகிறது. நாளை (11) திங்கள் வரை அவர்களுக்கு அவகாசம் கொடுத்திருப்பதாகவும், அதற்குள் வேலைக்குத் திரும்பாதவர்கள் பணியில் இருந்து விலகியவர்களாகக் கருதப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. சளைக்காத தொழிற்சங்கங்கள் நாளை மேலும் பல தொழிற்சங்கங்களை …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10931

க.பொ.த. சாதாரண தர பரீட்சை நாளை மறுநாள் ஆரம்பம்

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 8.30 மணியளவில் பரீட்சைகள் ஆரம்பமகும். எனினும் பரீட்சார்த்திகள் 8 மணியளவில் பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிக்க வேண்டும். பரீட்சைக்கு சமுகமளிக்கும்போது பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை என்பவற்றை அவசியம் கொண்டுவர வேண்டும். …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10929

2018க்கான வரவு-செலவுத் திட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

எதிர்வரும் 2018ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டம் பாராளுமன்றில் சற்று முன் நிறைவேற்றப்பட்டது. 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த மாதம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் சபையில் வாசிக்கப்பட்டது. இதையடுத்து, உத்தேச வரவு-செலவுத் திட்டத்தின் மீதான விவாதங்கள் கடந்த சுமார் ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது. உத்தேச வரவு-செலவுத் திட்டத்தின் மீதான மூன்று கட்ட வாக்கெடுப்பின் இறுதி வாக்கெடுப்பு சற்று முன் பாராளுமன்றில் நடைபெற்றது. இதில், வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10927

இலங்கையின் பொருளாதார செயற்றிறன் திருப்தி: சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் பொருளாதார செயல்திறன் குறித்த மூன்றாம் கட்ட ஆய்வுகளை சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் நிறைவு செய்துள்ளனர். இதன்மூலம் 250 மில்லியன் டொலர் நிதி நாட்டுக்குக் கிடைக்கவுள்ளது. இலங்கைக்கு வழங்கிவரும் நிதியுதவிகளின் செயற்பாடுகள் குறித்த ஆய்வுகளை சர்வதேச நாணய நிதியம் மேற்கொண்டிருந்தது. மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் இறுதிக் கட்ட ஆய்வுகள் நேற்றுடன் (7) நிறைவடைந்தன. ஆய்வுகளை மேற்கொண்ட சர்வதேச நாணய நிதிய உயரதிகாரிகள், கடந்த செப்டம்பர் மாதம் முதலான இலங்கையின் பொருளாதாரச் செயற்பாடுகள் தமக்குத் திருப்தி …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10925

கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை சமரசமாக தீர்க்கமுடியும்: சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளை சமரசமாக தீர்க்கமுடியும். இதனை சமரசமாகத் தீர்க்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கின்ற முறுகல் நிலையானது சுமுகமாக தீர்க்கப்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம். ஏனெனில் கூட்டமைப்புக்குள் இருக்கின்ற ஒரே கொள்கையை …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10923

ஐ.தே.க.வுடன் இணைந்து அரசமைக்கவும் தயார்: கூட்டு எதிரணி

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசமைக்கவும் தாம் தயாராக இருப்பதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது. கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (7) மாலை கொழும்பில் நடைபெற்றது. இதில், கூட்டு எதிரணியின் தலைவர் உள்ளிட்ட பிரதான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தலைவர் ஜீ.எல்.பீரிஸ் பேசும்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்காக தாம் அக்கட்சியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகத் தெரிவித்தார். ஏனெனில், அதைவிடத் தமக்கு வேறெந்தத் தெரிவும் இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். அவரையடுத்துப் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன, …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10920

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

இம் முறை கா.பொ.த. சாதாரண தரத்தில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை தொடர்பான அறிவுறுத்தல் ஒன்றை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள புதிய மற்றும் பழைய பாடங்களுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பாக பரீட்சைத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை புதிய மற்றும் பழைய பாடங்களின் கீழ் 2017 .12.12 முதல் 2017.12.21 வரையில் பரீட்சை நடைபெறவுள்ளது. பரீட்சை …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10918

சாட்சியாளர்களாக மைத்திரி – மஹிந்த

M.M

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் இன்று சந்தித்துள்ளனர். இராஜாங்க நிதியமைச்சர் லக்‌ஷ்மன் யாபா அபேவர்தனவின் புதல்வர் தென் மாகாண சபை உறுப்பினர் பசத யாப்பா அபேவர்தனவின் திருமண நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த திருமண நிகழ்வில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் தரப்பில் சாட்சியாளர்களாக முன்னாள், இன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் கையொப்பமிட்டனர். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10915

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான மேலும் இரு வர்த்தமானிகள் நாளை

உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது சம்பந்தமான இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களை நாளை 4 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடவுள்ளதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணயம் தொடர்பாக ஜனாதிபதியால் இதற்கு முன்னர் முன்வைத்த அறிக்கை மற்றும் எல்லை நிர்ணய ஆய்வுக்குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை உள்ளடக்கி அந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதாக செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினாலும் மற்ற வர்த்தமானி அறிவித்தல் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சராலும் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10910

மட்டக்களப்பில் மீனவர்களின் வலையில் பாம்பு, அச்சத்தில் மக்கள்!

SNAKE

மட்டக்களப்பில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள பாம்புகளின் வருகை தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ள நிலையில் இது உண்மையில் பாம்பா? அல்லது ஒரு வகை மீன் இனமா? என பல கேள்விகள் எழுந்தவண்ணமே உள்ளது. உண்மையில் இது ஒரு வகை மண் உழுவி எனப்படும் பாம்பு இனம் என்பதே இதன் பெயராக உள்ளது. இந்த பாம்பினத்தை சிலர் ஆரல் மீன் எனுவும் அழைக்கின்றனர். ஆரல் மீனுக்கும் இந்த வகை பாம்பினத்திற்கும் பல வித்தியாசங்கள் இருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10907

பிரஜைகளின் தனியுரிமை பாதுகாப்புச் சட்டம் ; பிரதமர் ஆலோசனை

நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் தனியுரிமையை பாதுகாக்கும் வகையிலான விதிவிதானங்கள் அடங்கிய விஷேட சட்ட வரைபு பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசணையின் பிரகாரம் இந்த விஷேட சட்ட வரைபு கொண்டுவரப்பட உள்ளது. தனிநபர் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டல் மற்றும் தனிநபர் அடையாளத்தை அச்சுறுத்தும் வகையில் செயற்படல் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக விஷேட சட்ட வரைபு பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10905

மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

இலங்கையில் பல்வேறு சமூக, கலாசாரங்களைக்கொண்ட மக்கள் வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றுகின்ற போதிலும் சமாதானமாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்து வருகின்றனர். இது சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதுடன், பன்மைத்துவ சூழலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பண்டைய காலம் முதலே எமது இந்த அழகிய தேசம் பல்வேறு சமய, கலாசார விழாக்களின் ஊடாக தமது சகவாழ்வை வெளிக்காட்டி வந்துள்ளது. …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10903

“நபி அவர்கள் காட்டித்தந்த வாழ்க்கை வழிமுறை முக்கியமானதாகும்” – ரணில்

நபி அவர்களின் பிறந்த தினம் எமது நாட்டில் நிலை¬யான அமைதி, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முஹம்மத் நபி அவர்கள் காட்டித் தந்த வாழ்க்கை வழிமுறை எந்தளவு முக்கியமானது என்பதைத் தெளிவுபடுத்த சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள மீலாதுன் நபி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இஸ்லாமிய சமய நம்பிக்கையின் படி இறைவனால் முஹம்மத் நபி அவர்கள் இஸ்லாத்தின் இறுதி நபியாகக் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவர் சிறந்த சமூகமொன்றை உருவாக்குவதில் தனிச்சிறப்பான பணியை …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10901

ஜெனிவா தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் : மார்க் பீல்ட்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, இந்த விவகாரத்தை தாம் எழுப்பியதாக, ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார். “ஒக்டோபர் மாத தொடக்கத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பக்கு, மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 34/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியது முக்கியமானது என்று …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10899

கோத்தபாய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தான் கைது செய்யப்படுத்துவதை தடை செய்யக்கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10897

முல்லைத்தீவில் இடம்பெற்ற மாவீரர் நாள்

IMG_1531__1_

முல்லைதீவு முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களின் பெற்றோார்கள் உறவினா்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு தங்களின் அஞ்சலிகளை செலுத்தினர். அந்த வகையில் முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்ட பின்னா் பிரதான பொதுச் சுடரை மூத்த தளபதி மேஜர் பசீலனின் தாயார் தங்கம்மா ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோா்கள் மற்றும் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10892

ஸ்ரீல.சு. கட்சி, கூட்டு எதிரணி இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொது எதிரணி ஆகியவற்றுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. அந்தவகையில் பொது இணக்கப்பாடு ஒன்றை இப்பேச்சுவார்த்தைகளின் ஊடாக ஏற்படுத்த முடியும் என இரு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொது எதிரணியும் இணைந்து செயற்படுவது குறித்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்த போதிலும் இதுவரையில் உறுதியான தீர்மானம் ஒன்று …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10890

தேசிய அரசாங்கத்திடம் கையேந்தும் மஹிந்த.!

தேசிய அரசாங்கத்தில் உள்ள எமது உறுப்பினர்களை மீண்டும் எமக்குத் தாருங்கள். எமது ஜனாதிபதியை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்கும் வரையில் தான் நாமும் வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். அஹுங்கல்ல,பொளிமதராராமய விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில். பொது எதிரணியுடன் பேச்சுவார்த்தை நடத்த …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10888

ராஜபக்ஷக்களின் குற்றங்களை மூடிமறைக்கவேண்டிய தேவை ஐ.தே.க.விற்கு இல்லை

நல்லாட்சி அரசாங்கத்தில் ராஜபக்ஷக்களின் குற்றங்களை மூடிமறைக்கவேண்டிய தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒருபோதுமில்லை. ராஜபக்ஷக்கள் குறித்த வழக்குகளை முன்னெடுக்கும்போது ஒருசிலர் தடுப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். பிணைமுறி விவகாரத்தில் அக்கறை காட்டும் நபர்கள் ஏன் தாஜுதீன் விவகாரத்தில் உண்மைகளை மூடிமறைக்கின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பினர். மாத்தறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது. இன்று நாட்டில் தற்போது …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10886

வீதிக்கு வந்த நல்லாட்சி பங்காளிகளின் உள்வீட்டு மோதல்

தேசிய அரசாங்கத்தின் பங்காளிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான மோதல்கள் வீதி சண்டைகளாக தீவிரமடைந்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை சுதந்திர தினத்திற்கு முன் வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியுடன் இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட பின்னர் வலுவான நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலுக்கு செல்வதே சிறந்தது என்ற எதிர்பார்ப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கைகளை எடுத்து வந்தார். ஆனால் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10884

புதிய அதிகாரத்துக்குத் திட்டமிடும் வட மாகாண முதல்வர்

வடபகுதியின் மீன்பிடி நடவடிக்கைகளுக்கான அதிகாரத்தை வடமாகாண அமைச்சின் கீழ் கொண்டுவர முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் முயற்சிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான வரைவுத் திட்டம் ஒன்றைத் தயாரிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றன. நேற்று (24) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது முதல்வர் இதுகுறித்துத் தம்மிடம் தெரிவித்ததாக, விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைக்கான வட மாகாண அமைச்சர் கந்தையா சிவனேசன் தெரிவித்துள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10882

நீதிமன்ற தீர்ப்பு இருப்பதால் தேர்தலை நடத்த முடியாது : லக்ஷ்மன் கிரியெல்ல

நீதிமன்ற தீர்ப்பு இருப்பதன் காரணமாக அரசாங்கத்தினால் தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சபை யில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி, வன ஜீவராசிகள் அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தின் போது தினேஷ் குணவர்தன தேர்தல் விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்ததை அடுத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தினேஷ் குணவர்தன குறிப்பிடுகையில், அரசாங்கம் வேண்டும் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10880

Older posts «

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.